மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், போராட்டம் நடத்தினால் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதாகவும் சரமாரியான குற்றசாட்டை கே.பாலகிருஷ்ணன் நேரடியாகவே முன்வைத்தார். இது பற்றி அவர் பேசும்போது ஆர்ப்பாட்டம், […]
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் […]
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் திடீர் சோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் அமலாகாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி […]
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள ‘முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை’ என்று தமிழ்நாடு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், அதை அலட்சியமாக கையாளுகின்றது என்று கூறி, தமிழக […]
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அதன்படி, ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவித்திருந்து தமிழக அரசு. […]
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு விடுமுறையாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 17ஆம் தேதி அரசு வேலை நாளாக இருந்தது. மேலும், வார இறுதி நாட்களான 18, 19 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை விட கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இதையேற்று 17ஆம் தேதியும் விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 14-19ஆம் தேதி வரை தொடர் […]
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் தொடர்ச்சியாக அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜனவரி 10-ஆம் தேதி தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் படி,.. லா நினா ஜனவரி நடுப்பகுதியில் இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்பதால் பசிபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு ஜனவரி 10, 2024 முதல் தென் இந்திய […]
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் தந்தை பழனிவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 […]
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்தது. அதன்பின் பெண் கொடுத்த fir லீக்கான நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும் எழுந்தது. எனவே, விவகாரம் பெரிய விஷயமாக வெடித்த நிலையில், உடனடியாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது, அங்கிருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமான நிலையில், இதுவரை 6 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டின் துவக்கத்திம் முதல் வாரத்திலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பட்டாசு தொழிலாளர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து வேலைக்கு […]
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை என்பது பற்றிய தகவலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 10-01-2025 கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், […]
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாஜக சார்பில் குஷ்பூ உள்ளிட்டோர் மதுரையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்களை ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றசாட்டும் எழுந்தது. பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ, திமுக எம்பி கனிமொழி ஏன் இது பற்றி பேசவில்லை. […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக பற்றி அவர் கூறிய, ‘ கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, அவர் […]
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பைய நாயக்கன்பட்டியில் சாய்நாத் என்கிற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இன்று காலை வழக்கம் போல ஆலை இயங்கி வந்த நிலையில், மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் வெடி சிதறியதில் ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாக வெடித்து சிதறியது. உடனடியாக சத்தம் கேட்டு […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி, கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசினார். இது […]
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவை விமர்சனம் செய்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள திமுக அரசையும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய இடைவெளி சமயத்தில் கழிவறை சென்ற குழந்தை, அங்கிருந்த செப்டிக் டேங்க் மீது எறியதாக கூறப்படுகிறது. அந்த செப்டிக் டேங்க் இரும்பு மூடி துருப்பிடித்து இருந்துள்ளதால், சிறுமி லியா லட்சுமி தவறி செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துவிட்டார். இதனை அடுத்து சில நேரம் கழித்து லியாவை […]
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின் இரும்பு மூடி உடைந்ததில், அதன் மீது நின்று கொண்டிருந்த அக்குழந்தை, அதற்குள் விழுந்து இந்த சோக சம்பவம் நேரிட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி […]
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06190) மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதே நேரம், 4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில் (06191) இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது […]