திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் […]
சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான […]
சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]
தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து […]
சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]
சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]
புதுதில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கினை ஜூலை 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007- இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விசாரணையானது தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி […]
புதுடில்லி: இரட்டைஇலை விவகாரத்தில் சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.இது குறித்து ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை குறித்து சசிகலா தரப்பினர் போலி கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். போலி ஆவணங்கள் தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் கூறினார்.