தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு இன்று மதுரையில் உள்ள பழங்காநத்தத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் சார்பாக எல்லா ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ஜல்லிகட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு […]
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். மதுரையில் உள்ள திருமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் அவர்களின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்துள்ளார். விழா முடிந்து காரில் பெரியகுளம் சென்றுகொண்டிருந்த போது, வழியில் ஓட்டல் ஒன்றில் காரை நிறுத்தி இரவுணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, […]
துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், […]
மாவட்ட நீதிமன்றங்களுக்கு, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஜாமீன் அல்லது முன் ஜாமீன் வழங்க அதிகாரம் உள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. கடலுர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்ததாக, விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மகாலட்சுமி என்பவருக்கு ஜாமீன் வழங்கி விருதாச்சலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சிறுமியின் தந்தை […]
மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பது ஒரு தந்திர வாக்குப்பதிவு என லட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிப்பை வைத்து சீப்பான அரசியலை செய்கிறார்கள் என்றார். திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். ஆனால், இடதுசாரி ஆதிக்கம் அம்மாநிலத்தில் முடிவுக்கு வந்துள்ளது. மாணிக் சர்க்கார் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் […]
திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை என்றும், அனைவரும் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவில் அதிகத் திறனுள்ள மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்த பெற்றோருக்கும் கண்கள் சிவந்து காணப்பட்டதுடன், கண்ணில் நீர்வடிதல், கண்கூசுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மாணவர்கள் பெற்றோர் என நூறு பேர் திருநெல்வேலி […]
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோட்டை சேர்ந்த சதீஷ் என்பவர் தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு […]
நடிகர் ராதாரவி இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.சூளகிரி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டம் பேரிகை பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகரும், தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான ராதா ரவி கலந்துகொண்டு பேசும் போது இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இன்னும் 6 மாதங்களில் முதல்வர் ஆவார் என்றும், அதன் பிறகு […]
தனது எதிரிகளை அழிப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்குகளும் அவருக்கு பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றன. இப்படி பல்வேறு தரப்பிலும் அவருக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தனது எதிரிகளை அழிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்ய […]
மத்திய அரசின் கிருஷி கர்மான் என்ற விருது உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் இதுவரை இல்லாத சாதனையாக 2015 – 2016ம் ஆண்டில் தமிழகத்தின் உணவு உற்பத்தி 1.14 நான்கு கோடி டன் என்ற அளவை எட்டியது. இதற்காக தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் இந்த விருதையும், பரிசுத் தொகையாக 5 கோடி ரூபாயையும் பிரதமர் மோடி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி […]
அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தலைமை பதில் கூற வேண்டிய விவகாரத்தில் கே.சி .பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவரை நீக்கியது கட்சியின் கொள்கை முடிவு என்றும் கூறிய ஜெயகுமார், நடுவர் மன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில், தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். நெல்லிக்காய் கொத்திலிருந்து சிதறுவது போல, ஒவ்வொருவராக டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி […]
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜனநாயக கடமையை ஆற்றவே எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதாக விளக்கம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2 வாரம் கெடு உள்ளதாகக் கூறினார். 5 ஆண்டுகள் ஜனநாயக கடமையாற்றவே மக்“எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை!” : தம்பிதுரை எம்.பிகள் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறிய அவர், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற […]
மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் .சமீபத்தில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள டிடிவி தினகரன் தனது முதல் போராட்டமாக மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தனது கட்சியின் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆளும் […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட நாடு கொள்கையில் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தே, தனது கருத்து என்று தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது நாஞ்சில் சம்பத் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, அவர் ஒரு தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளர் என்று குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக சிறையில் இருந்து 5 நாட்கள் பரோல் வெளிவந்த சசிகலா, நாள்தோறும் அப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்டார். பின்னர் சிசிக்சை முடிந்து […]
திரைப்படமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை ‘முல்லை வனம்’ இயக்குநர் ரவி ரத்தினம் இயக்குகிறார். மதுரையிலுள்ள தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ரவி ரத்தினம், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திரைப்பட, அரசியல், சமூக வாழ்க்கை குறித்த வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருக்கிறேன். நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்தப் படத்திற்கான தலைப்பும் முடிவு செய்யப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் திரைப்பட […]
கட்சியில் இருந்து நீக்கபட்ட கே.சி.பழனிச்சாமி, ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கேசி பழனிசாமி பேசினார். இதனால் அவரை முதல்வர் பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர். சர்வாதிகார மனப்பான்மை உடன் ஓ.பி.எஸ்., இபிஎஸ் செயல்படுகின்றனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதில் டெல்லியின் ஆதிக்கம் உள்ளதுடெல்லியில் இருந்து […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு அழுத்தம் தர வேண்டும் என தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையாது என குறிப்பிட்ட அவர், காவிரி டெல்டாவை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உச்ச நீதிமன்ற தலைமை […]
மார்ச் 25-ம் தேதி தஞ்சையில் டிடிவி தினகரன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் […]