குரங்கணி மலைப்பகுதியில் இருந்த சுக்குநாரி புல்லே தீ வேகமாக பரவ காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் […]
மீன்கள் டன் கணக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் நாட்டாமங்கலம், காவிரி கிராஸ், மாதையன்குட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் காவிரி ஆற்றின் இரு புறத்திலும் டன்கணக்கில் ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்கள் இறந்து கரையொதுங்கிக் கிடக்கின்றன. இந்தப் […]
போலீசார், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்ததில் தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தோடு அருகே தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. விவசாயியான இவர் இன்று அதிகாலை தமது விளை நிலத்தை பார்வையிடச் சென்று விட்டார். இவரது மனைவி ஜெயமணி, கல்லூரியில் படிக்கும் மூத்தமகள் தனுஷ்யா, 7 வயது மகள் பவித்ரா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். காலை 7 மணி அளவில் அவர்களது […]
பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் மொழி பேசிய மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட போது ராகுல் காந்தி எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்களை கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வெடிகுண்டு மிரட்டல் சென்னை விமான நிலையத்திற்கு விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் ஒருவர், விமானநிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து விமானநிலையத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் மடிப்பாக்கம் பகுதியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் […]
3 நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை , பட்ஜெட் மீதான விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 15ம் தேதி, நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சனை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் […]
அமைச்சர் ஜெயக்குமார் உலகின் மூத்த மொழியான தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தமிழை நசுக்கப் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் உள்ளவரை தழைத்தோங்கும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 6 வார கால கெடுவுக்கு, இன்றும் 11 நாட்களே உள்ள […]
அரசியல் அறிவிப்புக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் , இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கு 15 நாட்களுக்கு மேல் தங்குகிறார். அரசியல் அறிவிப்புக்கு இடையில் அவர் இமயமலை பயணம் மேற்கொண்டு இருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ரஜினிகாந்த் அதை பொருட்படுத்தவில்லை. அவருடைய அரசியல் அடித்தளத்துக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறார். அதன் ஒரு பகுதிதான் நிர்வாகிகள் நியமனம் ஆகும். இமயமலையில் இருந்து திரும்பியதும் ரஜினிகாந்த், அரசியல் பணிகளில் வேகம் காட்ட இருக்கிறார். […]
3 பேர் சென்னை புறநகர் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டனர். திருமுல்லைவாயில் சிட்கோ பகுதியான காட்டூரில் நின்று கொண்டிருந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்த சோழவரம் பகுதியை சார்ந்த சதீஷ்,விக்னேஷ்வரன் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மூவரும் இணைந்து லாரியை திருடி அதன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த […]
குடிபோதையில் சென்னை அடுத்த கொரட்டூர் பகுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பாரதி நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தி என்பவர் தனது மருமகன் பாலாஜியுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்த போது மூர்த்தியை பாலாஜி கீழே தள்ளி உள்ளார். இதில் மூர்த்தி நிலை தடுமாறி அருகில் இருந்த சுவற்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாலாஜியை கைது செய்த போலீசார் […]
தனியார் பள்ளி ஆசிரியை இராமநாதபுரத்தில் வீட்டருகே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முக பிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகப் பிரியா வீட்டின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சண்முகப் பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி களவாடப்படாதது, வீட்டில் துணி காயப்போடும் கயிறு கழுத்தில் சுற்றப்பட்டிருந்தது, கொடூரமான முறையில் […]
அரசியலில் இருந்து ஒருவருடத்திற்கும் மேல் ஒதுங்கி இருக்கும் தி.மு.க. தலைவா் கருணாநிதி 3 மாதங்களுக்கு பின்னா் இன்று மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்தாா்.. இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் .தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று வரும் கருணாநிதி இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தாா். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதிக்கு தொடா்ந்து பேச்சு பயிற்சி உள்ளிட்ட […]
தமிழக பட்ஜெட் குறித்து விமர்சித்த கமலுக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் ஒவ்வொரு நபருக்கும் ரூ.45,000 கடன் உள்ளது என கூறியதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, அவருக்கு ஒன்றும் என தெரிவித்துள்ளார். சிவகாசியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில்,’ ‘கமலஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை, அவருக்கு எதுவும் தெரியாது, அதை பொருட்படுத்தத் தேவையில்லை” என்றார். நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக மீது தெலுங்கு தேசம் […]
புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறவன்பட்டியை சேர்ந்த ராணி தனது கணவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கடந்த 2007 ம் ஆண்டு கைது செய்து பின்பு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராணிக்கும் மூத்த மகன் ஆனந்திற்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்படும் என்று கூறபடுகின்றது. நேற்றும் இதேபோன்று இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ராணி நான் உயிரோடு இருக்கும் வரை சொத்தில் சல்லி பைசா தரமாட்டேன் […]
SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை – செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சபடத்தேவையில்லை என்றார். SSLC examination for the SSLC examination: […]
பொறியியல் படிப்புகள் மீது அதிக நாட்டமுடைய மாணவர்கள், தற்போது இளநிலை அறிவியல் படிப்புகள் மீது கவனத்தை திருப்பியிருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2015-16 கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில் 41 லட்சத்து 60 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், இளநிலை அறிவியல் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 43 லட்சத்து 80 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை, 2016-17 கல்வியாண்டில், […]
திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார்.இது அவரது ஆன்மீக பயணம்.அரசியல் அல்ல என்றும் கூறினார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏன் எங்கு போனாலும் கூடவே வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் திராவிட நாடு தொடர்பாக கேள்வி கேட்ட போது, இது அரசியல் கேள்வி என்றும் […]
சென்னை எண்ணூரில் இருந்து குடிமைப் பொருள் ஏற்றிச் சென்றுக் கொண்டு, சேலத்திற்கு லாரி புறப்பட்டது. தாம்பரம் அடுத்த இரும்புலியூர் வழியாக சென்றது. அப்போது மேம்பால வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதில் லாரியில் இருந்த 20 டன் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையில் கொட்டின.அதிக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் கொட்டிய பருப்பை எடுக்க முடியவில்லை இதனால் வாகனங்கள் அதன் மேலேயே சென்றதால், மூட்டைகள் அனைத்தும் வீணானது. […]
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நோட்டுகளின் நிலை […]
புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க பெங்களூர் […]