சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி, நேற்று (11ம் தேதி) வரையில் நடைபெற்றது. முதல் நாளில், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அதிலும் குறிப்பாக, “சட்டப் பேரவைக்கு ஆளுநர் வருகிறார், ஆனால் உரையாற்றாமலே போய்விடுகிறார். அதனால்தான் அவரின் […]
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, மாநிலம் முழுவதும் அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீமானின் பேச்சு […]
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’ மாநாட்டில், நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை வெளிநாடு வாழ் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயிற்றுவிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அயலகத் தமிழர்களுக்கு கலை பயிற்சிகள் அளிக்க 100 ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள். 2 ஆண்டுகள் நேரடி கலை பயிற்சிகள் அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். பின்னர், மேடையில் உரையாற்றிய முதலமைச்சர், […]
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பது மட்டுமல்லாமல், படகுகளை பறிமுதல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தொடர் கதையாகி வரும் இந்த விவாகரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமன்னாருக்கு வடக்காக உள்ள நெடுந்தீவு கடற்பரப்பில், மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அதுத்துமீறி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் […]
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இந்த பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் பேசுகையில், ” 13ஆம் தேதி போகி பண்டிகை, 14 பொங்கல், 15இல் மாட்டு பொங்கல் (திருவள்ளுவர் தினம்), 16இல் உழவர் தினம். 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக கையெழுத்திட்ட கை இந்த கை. திமுக தேர்தல் […]
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்ற முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என அவர் […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடர் நிகழ்வுகள் பற்றியும், 4 ஆண்டுகால திமுக அரசு பற்றியும் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்து பேசினார் . இபிஎஸ் பேட்டி : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலை பற்றி பார்ப்போம். வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி இன்று (11-01-2025), மற்றும் நாளை (12-01-2025) கடலோர […]
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என கூறிவிட்டு தற்போது அதனை செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது ” கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று […]
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்றால் நிச்சியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்போல, திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு […]
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அதிமுக குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் ஆதங்கத்தோடு எழுப்பினார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு […]
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் […]
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரண்டு கட்சி தலைமைக்கும் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட நோட்டிஸில் ” 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. கட்சியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பானை சின்னம் தமிழ்நாட்டில் அடையாளமாக விசிக கட்சிக்கு […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி […]
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ‘நாம் தமிழர் கட்சி’. அப்போது முதல் இக்கட்சி பல்வேறு தேர்தல் களங்களை கண்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்று வருகிறது. இருந்தும் மாநில கட்சி அங்கீகாரம் பெரும் அளவுக்கு வாக்கு சதவீதத்தை எட்டாது இருந்தது. இந்நிலையில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 விகித வாக்கு சதவீதத்தை ஒட்டுமொத்தமாக பெற்றது. தேர்தல் ஆணைய விதிப்படி […]