தென்படத் தொடங்கி சூரிய கிரகணம் .!

சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது. இந்த சூரிய கிரகணத்தை மதியம் 3:04 வரைகாண முடியும். அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இன்று தெரியம் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும்.

தமிழகத்தில், சூரிய கிரகணம் காலை 10.20-க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும் என சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.

சந்திரன் பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் செல்லுவதால் இந்த சூரிய கிரகண நிகழவிருக்கிறது. இதன் மூலம் பூமியில் இருந்து பார்க்கும் பார்வையாளருக்கு சூரியனின் உருவத்தை முற்றிலும் அல்லது ஓரளவு மறைக்கிறதாம். சந்திரனின் விட்டம் சூரியனை விட சின்னதாக இருப்பதினால் ஒரு சூரிய கிரகணம் நிகழ்கிறது.

author avatar
murugan