கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.! தமிழக அரசு விளக்கம்.!

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.! தமிழக அரசு விளக்கம்.!

டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அழிப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் தொடுத்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் குரூப் டி தேர்வில் நிரப்பட்பட்ட 7382  பணியிடங்களில் அரசு தெரிவித்த கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை பின்பற்றப்படவில்லை என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை பொறுப்பு நீதிபதி ராஜா தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரித்தது. தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்கையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்து அதன் மூலம் வேலை அளிக்கப்படும் போது மட்டுமே கலப்பு திருமண முன்னுரிமை வழங்கபடும் என விளக்கம் அளிக்கப்பட்டது .

மேலும், இதில் டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது இந்த கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. இந்த வாதத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *