இவர்களுக்கெல்லாம் கட்டணமில்லா பேருந்து – தமிழக அரசு அறிவிப்பு.!

Free bus - chennai [File Image]

சென்னை : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நடப்பாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்துக்கு 10டோக்கள்கள் வீதம்  6 மாதங்கள் மாநகர் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க டோக்கன் வழங்கப்படுகிறது.

இதற்காக, சென்னையில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் என 42 இடங்களில் இந்த மாதம் 21ம்தேதி முதல் ஜூலை 31ம்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படவுள்ளது.

மூத்த குடிமக்கள் பயண டோக்கன்களை பெற இருப்பிட சான்று. குடும்ப அட்டை, வயது சான்று, ஆதார் அட்டை, 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.