மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு!

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு!

TANGEDCO

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அமைச்சரின் பதிவில்,கடந்த 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

இதை தொடர்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ளம் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கூடுதல் அவகாசம் அளித்தது தமிழக அரசு.

இதனால், வரும் 18-ஆம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களும் அபாரதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அபாரதத்துடன் மின்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அடுத்த மாதம் கணக்கெடுப்பில் ஈடுகட்டப்படும்.

அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் அபாரதத்துடன் மின்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அடுத்த மாதம் கணக்கெடுப்பில் ஈடுகட்டப்படும் என்றுள்ளனர். மிக்ஜாம் புயல் மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருதி முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக