MKStalin: ஜி20 மாநாடு விருந்து…டெல்லி சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By

MKStalin in G20

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக, டெல்லி சென்றடைந்தார்  மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளார்.

மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.