அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சிகள் சார்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழல், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தவுள்ளார். அக்டோபர் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்