ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும்.

read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை!

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் நடிக்கவே நடிகை தமன்னா சம்பளமாக 1.5 கோடி வரை தான் வாங்கி இருந்தார்.

ஆனால், இந்த பாடல் அவரை உலகமெங்கும் ட்ரெண்ட் ஆக செய்தது என்றே கூறவேண்டும். பல சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்த பாடலுக்கு தமன்னாவை நடனமாடுவதற்காக சம்பளமாக பேசி அவருக்கு வாய்ப்பு இன்னுமே வந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இனிமேல் தான் நடிக்க கமிட் ஆகும் படங்களுக்கு சம்பளமாக 5 கோடி கேட்க தமன்னா முடிவு எடுத்து இருக்கிறாராம்.

Read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கதை எல்லாம் கேட்டு முடித்த பிறகு தனக்கு சம்பளமாக 5 கோடி வேண்டும். ஜெயிலர் படம் என்னால் தான் வெற்றி அடைந்தது என்று கூறுகிறாராம். இதனை காரணமாக வைத்தே தமன்னா தனது சம்பளத்தை 1.50 கோடியில் இருந்து 5 கோடிக்கு உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Read more- பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்!

மேலும், நடிகை தமன்னா தற்போது தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைப்போலவே, வீடா மற்றும் ஸ்ட்ரீ 2 ஆகிய ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment