இயற்கையின் இரு முனைகளை பற்றி பேசும் பேரன்பு…..!!!

இயற்கையின் இரு முனைகளை பற்றி பேசும் பேரன்பு…..!!!

Default Image

பேரன்பு படம் சர்வதேச திரைப்பட விழாவில் , பார்வையாளர்களின் வாக்கின் படி, 187 படங்களில் இந்த படம் 20-வது இடத்தை பிடித்தது. இதுவரை 20 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய படம் பேரன்பு தான். இந்த படம் மக்கள் மத்தியில், மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில், இந்த படம் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்துவிட்டு, அனைவரையும் சமமாய் பாவிக்கும் இயற்கையின் முரண் குறித்து பேசும் படம்தான் இந்த பேரன்பு.

இந்த பேரன்பு படம் குறித்து இயக்குனர் ராம் அவர்கள் கூறுகையில், கொடூரமாகவும், அதே சமயம் பேரன்பாகவும் இருக்கும் இயற்கையின் இரண்டு முனைகளை பற்றி பேசும் படம்தான் ‘பேரன்பு’ என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube