சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ..! இந்திய அணியில் சிறிய வயதிலே அதாவது சச்சினுக்கு அடுத்த படியாக இடம்பெற்ற ஒரு முக்கிய வீரர் யுவராஜ் சிங் ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் சர்வேதச போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ‘சிறந்த தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தியவர். அந்த அளவிற்கு அவரது பங்கை இந்திய அணிக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் சவால்கள்..! அதன் […]