டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,39,189 தபால் வாக்குகள் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியது. இந்த பதிவான தபால் வாக்குகளில், படிவம் 13ஏ-வில், கையெழுத்திடும் அதிகாரி, அவர் கையொப்பம் மட்டுமல்லாது, பதவி மற்றும் முத்திரை இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை தளர்த்தி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு […]
MLA VS Sivakumar : நாடளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் எம்.எல்.ஏ. சிவகுமார் வாக்காளரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.எல்.யான எம்.ஏ.சிவகுமார் வாக்களிக்க […]
வங்கி மோசடி வழக்கில் ஆந்திராவின் அரக்கு தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி கீதா கொத்தப்பள்ளியை சிபிஐ கைது செய்தது. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ₹42 கோடி வரை மோசடி செய்ததாக கீதா மற்றும் அவரது கணவர் மீது 2015 ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் PNB-க்கு தவறான தகவல்களை அளித்ததாக சிபிஐ கூறியுள்ளது.