ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.! குடியசு தலைவருக்கு கடிதம் எழுதிய ஆந்திர எம்பி.!

ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.  ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு என்பவர் கடந்த புதன்கிழமை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி அந்த கடிதத்தில்  எம்பி கே.ரகு … Read more

ஆந்திராவில் இன்று உதயமாகும் 13 புதிய மாவட்டங்கள்!

ஆந்திரா:ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அரசு,கடந்த ஜனவரியில்,ஏற்கனவே உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு  கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு,பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அழைத்தது. இதனையடுத்து,ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களில் இருந்து மேலும் 13 புதிய மாவட்டங்களை பிரித்து அரசிதழ் அறிவிப்பை … Read more

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கவுன்சிலர் கார் ஏற்றி கொலை..!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காக்கிநாடா கவுன்சிலர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு ரமேஷ் விபத்தில் அடிபட்டு இருப்பதாக காவல்துறை தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூய்விற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் போலீசாருக்கு சந்தேகம் இந்த நிலையில் அங்குள்ள  சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ரமேஷ் … Read more

போலிஸாரின் காலில் விழுந்து வணங்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் போது, பொதுமக்களின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் கொரோனாவுடன் போராடி வருகின்றனர் நமது மருத்துவர்கள். அதேபோல கொரோனா பொதுமக்களிடம் பரவாமல் காவல்துறையினரும் அயராது உழைத்து வருகின்றனர்.  இதனை கௌரவிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரின் காலில் விழுந்து ஒருவர் வாங்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ செட்டி பால்குனா ஆந்திர … Read more

லஞ்சம் கேட்டால் உடனே 14400 என்ற நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்! அதிரடி முதல்வரின் அடுத்த திட்டம்!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

வீட்டு காவலில் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன்! ஆளும் அரசுக்கு எதிரான பேரணி நடைபெறுமா?!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது மேலும் தெலுங்குதேசம் கட்சி மீது கட்சியினர் மீது தொடர் தாக்குதலையும்,  அரசியல் வன்முறைகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி அதன் பெயரில் இன்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று உண்ணாவிரதம் நடக்க இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், அவரது … Read more