சென்னை சேர்ந்த பெண் ஒருவர் கோயம்பேட்டில் இருந்து மன்னார்குடிக்கு இரவு பேருந்தில் சென்று உள்ளார். அப்போது அப்பெண் உறங்கி கொண்டிருந்தபோது நடத்துனர் ராஜீ பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஓடும் பேருந்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துனர் ராஜு மீது புகார்கள் எழுந்ததால் அவரை பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.