எட்டு வழிச் சாலை பிரச்னைக்காக தமிழக விவசாயிகளைக் காண வந்த யோகேந்திர யாதவை, தமிழக காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து விடுவித்தனர். யார் இந்த யோகேந்திர யாதவ் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னர் இருந்தே பல காலமாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக செயல்பட்டு வருபவர். டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்பட்டவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ‘சுவராஜ் […]