யெஸ் பேங்: இந்தியாவில் ஐடி நிறுவனம், டெக் நிறுவனம் போன்ற சில துறையில் பணிநீக்கம் செய்வது அரிதானதாக இருந்தாலும் முதல் முறையாக வங்கித்துறையில் கொத்தாக பணிநீக்க அறிவிப்பு வெளியாகி இருப்பதால் இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய வங்கிகளின் வலிமையான நிதி ஆதாரத்துடன் இருப்பதை தொடர்ந்து வரும் இந்த வேளையில் தனியார் வங்கியான யெஸ் வங்கி, மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேலான பணியாளர்களை யெஸ் வங்கி பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பணியாளர்களைச் சிறப்பாகப் […]
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர். இது குறித்த தக்க விவரங்களை பற்றி இதில் பார்ப்போம். இதற்கு முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) வங்கிகளில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண (Debit Card Maintenance Charges) விவரங்கள் கொண்டுவரப்பட்டது. அதே போல தற்போது யெஸ் பேங்க் (Yes Bank) வங்கியில் பல்வேறு கணக்கை வைத்திருக்கும் […]
தனியார் கடன் வழங்குனரான எஸ் பேங்க் (Yes Bank), ரூ.48,000 கோடி மதிப்புள்ள வாராக்கடன்களை ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சிக்கு விற்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்விஸ் சவால் எனும் பொது ஏலம் விடும் முறையில் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி (JC Flowers ARC) க்கு எதிராக எந்த நிறுவனமும் ஏலம் கேட்க முன்வராததால், ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி வென்றதாக எஸ் பேங்க் (Yes Bank) அறிவித்தது. ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி தனது ஆரம்ப ஏலத்தொகையாக ரூ.11,183 கோடி யை […]
யெஸ் வங்கியில் ரூ.3642 கோடி கடனை திருப்பி செலுத்தாதால் காக்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி,ஆடிட்டர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. யெஸ் வங்கியில் சுமார் 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடன் பெற்ற காக்ஸ் நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்தாமல் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் யெஸ் வங்கியில் ரூ.3642 கோடி கடனை திருப்பி செலுத்தாதால் காக்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி அனில் கான்டேல்வால் மற்றும் அதன் ஆடிட்டர் நரேஷ் ஜெயின் இருவரையும் நேற்று […]
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் ஏப்ரல்-3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000 மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் […]
யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் […]
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது மத்திய புலனாய்வு துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. யெஸ் வங்கியில் கவுதம் தப்பார் என்பவரின் அவந்தா ரியாலிட்டி என்ற நிறுவனத்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராணா கபூர், அவரது மனைவி பிந்து, கவுதம் தப்பார் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி, மும்பையில் பல்வேறு இடங்களில் உள்ள ராணா கபூரின் வீடு, அலுவலகங்கள், பிந்துவுக்கு சம்பந்தப்பட்ட பிலிஸ் […]
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கியின் 49% பங்குகளில் முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகும் என நிதியமைச்சர் சீதாராமன் […]
வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில், யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், யெஸ் வங்கியின் […]
யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், […]
எஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர், வங்கியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று கூறி, உயர் அதிகாரிகளுக்கு கோல்டன் பின் என்ற பெயரில் விருதுகளை வழங்கிய அவர், மும்பையில் உள்ள தமது ஆடம்பர வீட்டில் பிரம்மாண்டமான விருந்து வழங்கும் விழா நடத்தி வந்துள்ளார். பின்னர் மற்ற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து கடன் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கடன்களை வாரி வழங்கியதுடன், வங்கிப் பணத்தில் ஆடம்பர […]
வாராக்கடன் பிரச்சினையிலும், பண மோசடிலும் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் டெல்லி, மும்பை இல்லங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் பல கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களை […]
நிதி நெருக்கடியிலும், பண மோசடிலும் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. இதையடுத்து வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதியளித்தார். இதனிடையே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர், […]
யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடி சிக்கி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த யெஸ் வங்கியில்தான் புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு காணிக்கை மூலமாக வந்த ரூ.545 கோடி பணத்தை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 […]
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த போன்பே சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து […]
தனியார் வங்கியான யெஸ் வங்கி தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதை நிர்வகிக்க எஸ்பிஐ முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் மட்டும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் […]
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் மாட்டித் தவிக்கும் Yes Bank, கடந்த ஆண்டு ரூ.1,500 கோடி இழப்பை சந்தித்தது. இதன் காரணமாக அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதனால், Yes Bank-யுடன் […]
தனியார் வங்கியான யெஸ் வங்கி வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் YES வங்கி, NO வங்கியானது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.