கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் வர கட்டாயப்படுத்த கூடாது என்றும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த தரளவுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஜூலை 14-ஆம் இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ஆம் தேதி (நாளை)காலை 5 மணி வரை ஊரடங்கு மீண்டும் விதித்தது. பெங்களூரில் பிறப்பிக்கப்ட ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. இதனால், பெங்களூரில் உள்ளவர்கள் மத்தியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பது குறித்து கர்நாடக […]
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியர்களிடம் ,வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார். நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்க்காக பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர். […]
கர்நாடக சட்டமன்ற விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான அரசு முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆடியோவால் புது பிரச்சனையில் சிக்கியுள்ளது. அதாவது, கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி கவிழ காரணமாகியிருந்த ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்களுக்கு தற்போது வரும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாக தகவல் வெளியானது. அதாவது, காலியாக உள்ள 15 சட்டமன்ற இடங்களில் வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக கர்நாடக பாஜக […]
கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது.அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே .கன்னட மொழிக்கு தரப்படும் […]
நாடு முழுவதும் பிளாஷ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 2016ஆம் ஆண்டே பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது. இங்கு முதல் தடவை பிளாஸ்டிக் உபயோகப்படுத்தி மாட்டிக்கொண்டால் 500 ருபாய் அபராதமும் , மீண்டும் தொடர்ந்தால் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தப்படும். இந்நிலையில் அண்மையில் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மலர்க்கொத்து கொடுத்தார். அந்த பூங்கொத்து சுற்றி, பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்தது. இதனால், மேயருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீது […]
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பானமையை நிரூபித்தார் எடியூரப்பா. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நடைபெற்று வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தோல்வி அடைந்தது.இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் எடியூரப்பா […]
கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி பதவி விலகினார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் 105 வாக்குகள்பெற்று வெற்றி பெற்று எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார். இதன் பின்னர் முதல்வராக […]
கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மஜக கட்சி கூட்டணியில் ஆட்சி புரிந்து வந்த நிலையில் திடீரென ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோற்று தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆட்சிஅமைத்துள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறித்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். பாஜகவுக்கும் இந்த ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என கூறிவிட்டு சென்றார். இதற்க்கு சித்தராமையா, ‘ […]
கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா. இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த […]
இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்றார். இதன் பின்னர் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் . இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான்.பிரதமர் மோடி, அமித் ஷா […]
கர்நாடகவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இது குறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் […]
கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. ஆதலால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இதுகுறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசியலில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் […]
கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் யாமம் நடத்தி வருகின்றனர். மேலும் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கர்நாடக அதிமுகவினரும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் , பாஜக எம்.பியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று முன்தினம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டு […]
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல் .ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் எம்.எல் .ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை . ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவு விட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் 15 எம்.எல் .ஏக்களும் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடந்த முதலமைச்சர் […]
கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். மொத்தம் 11 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பொறுத்திருந்து […]
கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம் என்று கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.அதேபோல் மாநிலம் முழுவதும் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேர மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள பல எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியில் இணைய, ஆர்வத்துடன் உள்ளனர் என்றார். தற்போதைய கூட்டணி அரசு எத்தனை நாட்கள் பதவியில் நீடிக்கும் […]