இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.முதல் சுற்றில் திரௌபதி முர்மு முன்னிலை பெற்றுள்ளார். திரௌபதி முர்மு – 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா – 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்று வரும் குடியரசு தலைவர் தேர்தல் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவி காலம் இந்த மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்முவும் , காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை […]
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பாஜக தங்கள் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் ஜார்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதே […]