தனது திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த சைத்ரா.!

சைத்ரா தனது திருமண புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்னும் தொடரில் வில்லியாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் சினிமா துறையில் உள்ள ராகேஷ் எனும் ஒருவரை விரும்பி கடந்த 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ஹைதராபாத்தில் நடந்ததாகவும் நெருங்கிய அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே தமிழ்நாட்டில் விரைவில் இவர்களின் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடக்கும் எனவும் சைத்ரா தரப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் தனது புகைப்படம் மற்றும் திருமண வீடியோக்களையும் இணையதள பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Chaitra (@chaitrareddy_official)

 

கோலாகலமாக இன்று நடைபெற்ற யாரடி நீ மோகினி சைத்துவின் திருமணம்!

இன்று  யாரடி நீ மோகினி சைத்ராவின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

யாரடி நீ மோஹினி எனும் முன்னணி தனியார் தொலைக்காட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை தான் சைத்ரா. இவர் கடந்த பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தாலி கட்டி தமிழ் கலாச்சார முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு மற்ற சீரியல் பிரபலங்களும், நெருங்கிய தோழிகளாகிய ரேஷிமா, ஷபானா மற்றும் நட்சத்திரா உள்ளிட்டவர்களும் வருகை தந்துள்ளனர்.