Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் தேதி மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி , பாஜக மற்றும் ஜனசேனா உடன் கூட்டணி […]
ஆந்திரா:ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் மொத்தம் 26 மாவட்டங்களாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அரசு,கடந்த ஜனவரியில்,ஏற்கனவே உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு,பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை அழைத்தது. இதனையடுத்து,ஆந்திரப் பிரதேச அரசு தற்போதுள்ள 13 மாவட்டங்களில் இருந்து மேலும் 13 புதிய மாவட்டங்களை பிரித்து அரசிதழ் அறிவிப்பை […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் […]
ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை மக்களிடம் விரைவாக கண்டறிய வெளிநாடுகளில் இருந்து ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது. இதுவரை 3 லட்சம் ரேபிட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளன. ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 […]
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இன்று ஆந்திரா அமராவதியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் 151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை இன்று மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.