சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு அமெரிக்காவில் சாண்ட்பிராசிஸ்கோவில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நான்கு நாள் பயணமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீனா அதிபர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்கள் மத்தியில் பல்வேறு […]
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்குபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17-ஆம் தேதி […]
பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று வருகை தந்தார்.அங்கு சென்ற அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிறப்புகளை எடுத்து விளக்கினார்.இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்பு ஹோட்டலுக்கு சென்றார்கள். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி […]
நினைவுப் பரிசுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.மேலும் தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
விளக்கொளியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஜொலித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.
மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் கண்டு களித்து வருகின்றனர். பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.பின் அவருக்கு அங்குள்ள சிறப்புகளை விளக்கினார்.பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்து வருகின்றனர் .பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் கண்டு ரசித்தனர்.
பிரதமர் மோடி வழக்கமாக அணியும் குர்தாவை அணியாமல் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள சிறப்பங்களின் சிறப்பை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மோடி விளக்கம் அளித்தார்.அப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்றவாறு பிரதமர் மோடி, […]
மாமல்லபுரத்தில் சீன அதிபர் அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்த்தனர். அப்போது பிரதமர் மோடி சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கினார். இதையடுத்து அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள பல சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி. பின்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு சென்னை வந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு […]
பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவருக்கு மேளதாள , கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசு காரில் கிண்டி கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலில் சில மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஷி ஜின்பிங் தற்போது மாமல்லபுரம் புறப்பட்டுள்ளார். சோழா ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த சீன அதிபருக்கு மேளதாள வாத்தியங்கள் , கலை நிகழ்ச்சி முழுக்க தமிழகம் சார்பில் சீன அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கேவ் ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி […]
சீன அதிபரை அழைத்துச் செல்ல பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது. சீன அதிபர் வருகையையொட்டி சென்னை ஜிஎஸ்டி சாலை, விமானநிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஓட்டல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் சற்று நேரத்தில் சென்னை வருகிறார். சீன அதிபரை அழைத்துச் செல்ல குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.
சென்னை வந்திறங்கியுள்ளேன் என்று தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இதனால் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். pic.twitter.com/NxVUDlU86Y — Narendra Modi (@narendramodi) October 11, 2019 இது […]
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. இந்திய விமான படைக்கு சொந்தமான விமானத்தில் மோடி சென்னை வந்தார்.விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சற்று நேரத்தில் பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார்.விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் , ஆளுநர் ,ஜி.கே வாசன் மற்றும் பிரேமலதா ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இரு நாட்டு தலைவர்களும் இன்று சென்னை வர உள்ள நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் […]
மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி ,சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனகளில் வேலை செய்பவர்கள் நாளை வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அங்கு உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளது.
நாளை மறுநாள் சீன பிரதமர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக 34 அதிகாரிகளும் ,மேற்பார்வையிட 10 ஐ .ஏ எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு […]