சீன அதிபரின் அழைப்பை ஏற்று சீனா செல்கிறார் பிரதமர் மோடி என்று வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்றும் இன்றும் பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.இந்த நிலையில் சந்திப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே கூறுகையில்,அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஷி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் […]
சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தமிழகம் சார்பில் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தி ஓய்வெடுத்தார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக மோடியை சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் […]
சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்று மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.அங்கு உள்ள கடற்கரை கோயிலின் சிறப்பை விளக்கினார் பிரதமர் மோடி.மேலும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் […]
கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜின்பிங்கை ஓட்டலில் இருந்து வழியனுப்பி வைத்தார் […]
தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நன்றாக உணர்ந்துள்ளோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கோவளம் தனியார் விடுதியில் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்திய – சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசினார்.அவர் பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தை வருங்காலத்தின் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம்.வரவேற்பால் மனம் மகிழ்ந்தேன், விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது.தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம்.மறக்க முடியாத ஒரு அனுபவம் எனக்கும் […]
இந்தியா – சீனா இடையே இருதரப்பு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின் கடற்கரையை ரசித்த பின்னர் பேட்டரி காரில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது.
கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே நேற்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லப்புரத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் பிரதமர் மோடியை 2வது நாளாக சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இரவு விருந்தில் சீன அதிபருக்கு தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசு வழங்கினார் .இதற்கு பின் சீன அதிபருக்கு இரவு விருந்தில் தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருந்தில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளான தக்காளி ரசம், சாம்பார், கடலைக்குருமா, தோசை, இட்லி, பொங்கல், வடை, கவுனி அரிசி அல்வா, உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட உள்ளது.