சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அச்சகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே தமிழக அரசு கிளை அச்சகம் உள்ளது. இதில் 2000ம் ஆண்டு வாங்கிய இயந்திரம் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 16 பிரதிகள் மட்டுமே எடுக்க முடியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல்துறை என பல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய நீதிமன்ற உத்தரவு நகல்கள், வழக்கு குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இந்த […]