மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் கொரோனா முதலில் பரவியதாக கூறினாலும் தற்போது, அங்கு கொரோனா தாக்கம் குறைந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் கடந்த ஜனவரி மாதம் உகான் நகரம் முழுவதும் […]
அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியவரை பரவியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 50 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சிறுவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனா உருக்குலைந்து வரும் நிலையில்,அதை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது புதியதாக “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி […]