சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கண்டிபித்துத் தரக்கோரி அவரது மனைவி ‘முகிலனைத் தேடி’ எனும் நீதி கேட்கும் பயணத்தை துவங்கியுள்ளார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து ஆவணப்படம் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த நான்கு வாரங்களாக காணவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும், காவல்துறையும் இணைந்து அவரை கடத்தியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆட்கொணர்வு மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை என முகிலன் மனைவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், பிப்ரவரி 15-ஆம் தேதி […]