உலகிலேயே முதல் பாதிப்பாக இந்தியாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு டெல்லியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சற்று குறைந்துள்ளது.இருப்பினும்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அடுத்த பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோயானது பரவத் தொடங்கியுள்ளது.இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது கண்,மூக்கு மற்றும் மூளை உள்ளிட்ட பகுதிகளை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்,இந்த கருப்பு பூஞ்சை தொற்றினால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில்,அடுத்தகட்ட பாதிப்பாக வெள்ளை பூஞ்சை பாதிப்பானது,டெல்லியின் சர் கங்கா ராம் […]