அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். இந்திய கோடீஸ்வரர், தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் வருவாய், அதானி குழுமத்தின் பங்குகளின் ஏற்றத்தால், உலகின் இரண்டாவது பணக்காரராக அவரை உயர்த்தியுள்ளது. பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலின்படி, செப்.16, 2022 நிலவரப்படி, அதானியின் நிகர மதிப்பு $155.7 பில்லியன் ஆகும். […]