உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க நேற்று அதிகாலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பலமணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, நேரடியாக ராணுவ படைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டது. உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை […]
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்பதாக மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு வீரர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் […]
கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதி இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதி இயற்கை மாசாலும், மக்களின் கவனக் குறைவாலும் நதி பல வகைகளில் மாசடைகிறது. அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் மூலம், நதியை மாசு இல்லாத, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதை உறுதி செய்ய முயல்கிறது. இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதியைப் […]
தமிழகத்தில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடு கட்டி தருவதாக, தமிழகத்திற்கு உலகவங்கி ரூ.250 மில்லியன் டாலர் கடனுதவி. உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் கேரளா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறும். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடுகட்டி தருவதற்கான […]
கொரோனா பாதிப்பால் கல்வித்துறை மிக மோசமான நிலையை சந்திக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், […]
உலக வங்கியின் தலைவராக பணியாற்றி வந்த தென் கொரியாவின் ஜிம் யோங் கிம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் , கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிகமாக தலைவராக பணியாற்றி வருகின்றார். உலக வங்கியின் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவும் பரிந்துரை செய்துள்ளார். இது உலக […]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பாக உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவீதமாக உயரும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் இது 7.5 சதவீதமாகும் எனவும் உலக […]