20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் ஓடி,ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.இதற்கு முன் 3 நிமிடம், 26.64 வினாடியில் வந்ததே சாதனையாக இருந்தது. […]