Tag: world

டிரம்ப் மீது பார்லிமென்டில் கண்டன தீர்மானம்!!

மெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த, எம்.பி.,யான, பிராட் ஷெர்மேன், அதிபர் டிரம்பிற்கு எதிராக, பார்லிமென்ட்டில் கண்டன தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். அதிபராக பதவியேற்ற பின், டிரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் கண்டன தீர்மானம் இது. ‘அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது பற்றி, முறையாக விசாரணை நடத்த விடாமல், […]

world 3 Min Read
Default Image

இந்திய கடற்படை அதிகாரி தாய்க்கு பாகிஸ்தான் செல்வதற்கு விசா ..

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. இவருக்கு, பாக்., ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை, சர்வதேச கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனைஅடுத்து ஜாதவை சந்திக்க, அவரது தாய்க்கு விசா வழங்கும்படி, இந்தியா விடுத்த கோரிக்கையை, பரிசீலித்து வருவதாக, பாக்., வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

world 1 Min Read
Default Image

”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” நவாஸ் ஷெரீப் அதிரடி

 ‘பனாமா கேட்’ மோசடி தொடர்பான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக, பதிவு செய்ய வேண்டும் என, கூட்டு விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, ‘நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், ”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. என்னை தேர்வு செய்தது மக்கள் தான்; எதிர்க்கட்சிகள் இல்லை,” என, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து  எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று ஆலோசித்து கொண்டு இருகின்றனர்…

world 2 Min Read
Default Image

தீவிரவாதிகளின் வேறிச்செயல்: 4 போலீசார் மரணம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் , பலுசிஸ்தான் மாகாணத்தில், போலீசார் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, தலிபான் பயங்கரவாதிகள் நேற்று, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  இதில், போலீஸ் உயர் அதிகாரி உட்பட நான்கு போலீசார், அதே இடத்தில் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்துள்ளார் .

world 2 Min Read
Default Image

நோபல் பரிசு பெற்ற ஜியாபோ மரணம்.., உலக நாடுகள் இரங்கல்

சீனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லி ஜியாபோ(61), கம்யூனிச பாதையில் இருந்து ஜனநாயக பாதைக்கு சீனா மாற வேண்டும், ஒரு கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். மனித உரிமையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு புத்தகங்கள் எழுதினார். சீன அரசியல் சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி 2008ல் இவர் எழுதிய புத்தகத்துக்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, 2010 ம் ஆண்டுக்கான […]

world 2 Min Read
Default Image

சூரியனின் வாழ்நாள் முடிய போகிறது.. நாசா அதிர்ச்சி தகவல்!!!

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரிய கோட்டையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரிது. இந்த பகுதி சூரியனின் மற்ற பகுதிகளை விட குளிர்ச்சியானதாகவும், சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும்இது சூரியனின் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பகுதி சுழன்று வருவதுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. சூரியன் வெளியிடும் அதிக ஆற்றலில் புதிய தீவிர ஊதா கதிர்கள் வெளியிடுவது தெரியவந்துள்ளது. இந்த […]

world 2 Min Read
Default Image

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்..,

சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் படிப்படியாக மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது அறிமுகம் செய்யப்படும் என்றும், அதுவும் ஷரியா மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் அந்நாட்டு கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான், சவூதி அரேபியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக பங்கேற்றார். சவூதியில் பெண்களுக்கு எதிராக கடுமையான […]

world 2 Min Read
Default Image

வயதான ரியல் ஹீரோ..அசர்பைஜான் நாட்டில் அனைவரும் ஆச்சரியத்தில்!!!

அசர்பைஜான் நாட்டில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது. இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில்  சத்தம்போட்டனர்.கார் தீப்பிடித்து எரிந்ததால் காப்பாற்ற சென்றவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது முதியவர் ஒரு தைரியமாக அருகில் சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் கதவு திறக்காததால் உடனே அவர் காரை ஓங்கி ஒரு உதைவிட்டார். ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். […]

world 2 Min Read
Default Image
Default Image

அணு ஆயுதத்தை குவிக்கிறது இந்தியா… கவலையில் அமெரிக்கா

வாஷிங்டன்:இரு அமெரிக்க அணு விஞ்ஞானிகள் இந்தியா சீனாவுக்காக தனது அணு ஆயுத உற்பத்தியை நவீன மயமாக்கி அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் ஹேன்ஸ் எம் கிறிச்டென்சன் மற்றும் ராபர்ட் எஸ் நோரிஸ், இவர்கள் அமெரிக்காவில் வெளியாகும் மாதப் பத்திரிகை ஒன்றில் “இந்திய அணு ஆயுதங்கள் 2017” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதில்உள்ளதாவது,இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தி என்பது முதலில் பாகிஸ்தானை பயமுறுத்த ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது சீனாவுக்கு எதிராக பயன்படுத்த […]

world 4 Min Read
Default Image

ஜெர்மனியில் பிச்சை எடுக்கும் இந்திய ஒலிம்பிக் வீராங்கனை..

இந்தியாவைச் சேர்ந்தவர் காஞ்சனாமாலா பான்டே. கண்பார்வையற்றவரான இவர் நீச்சல் வீராங்கனை. பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனியில் உள்ள பெர்லின் சென்றுள்ளார். போட்டியில் கலந்து கொள்வதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் அவரது கைக்கு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கடன் வாங்கும் நிலைக்கும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். சோதனையிலும் சாதனை இத்தனை வேதனையிலும் மனம் தளராது போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் […]

world 4 Min Read
Default Image
Default Image

வெள்ளை மாளிகையில் தலைமைப் பொறுப்பு ஏற்கும் இந்திய பெண்!

உலக அரங்கில் மிகப்பெரிய நிர்வாகப் பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிப்பது அன்றாடச் செய்தியாக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள மனித வளம் உலக வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருவதற்கான பல உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன. இந்த வரிசையில் தற்பொழுது இடம்பெற இருக்கிறார் நியோமி ராவ். ஆம்! இவர் வெள்ளை மாளிகை நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் அமர உள்ளார். அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிப் பெண் முக்கியப் பதவி வகிக்க உள்ளார். இங்குள்ள தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார […]

world 3 Min Read
Default Image