தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். 36 வயதாகும் […]
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து, அந்த பதவியில் சிஐஏவின் இயக்குநர் மைக் போம்பியா நியமிக்கப்பட்டார். இதனால் காலியான சிஐஏ இயக்குநர் பதவியில், துணை இயக்குநராக இருந்த கினா ஹஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். இந்நிலையில், கினா ஹஸ்பெல் நியமனம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 54 […]
அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு ட்ரம்ப் நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதில் அணு ஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. […]
ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் கிளம்ப வேண்டிய ரயில் 25 வினாடி முன்னதாக கிளம்பி சென்றது. அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பயணிகள் ரயிலை தவற விட்டதை தெரிந்த ரயில்வே நிர்வாகம் தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது […]
பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி. இவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால், பாகிக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் […]