ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது. ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண விழாவிற்காக, பிரத்யேக ராயல் கேக் தயாராகி வருகிறது. இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் சனிக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனின் பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான Violet bakers, இவர்களின் திருமண கேக்கை தயாரிக்கும் பணிக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் முகாமிட்டுள்ளது.க்ளாரே ப்டக் (Clarie Ptak) என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். பட்டர் க்ரீம் மற்றும் நிஜ பூக்களைக்கொண்டு கேக் அலங்கரிக்கப்பட உள்ளது. இந்த ராயல் கேக்கின் விலை […]
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணியை சிறுத்தை விளையாட்டுத்தனமாக பிறாண்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன. வனப்பகுதியில் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்றினை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வாகனத்தின் அருகே வந்த சிறுத்தை சுற்றுலாப் பயணி அணிந்திருந்த காலணியை நுகர்ந்து பார்த்த பின் தனது நகங்களால் அதனை இழுக்க முயன்றது. இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சுற்றுலா பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை […]