இன்று உலக மலேரியா நாள் கொண்டாடப்படுகிறது. மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. எனவே உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. […]