கொரோனா வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் 2 வருடங்களாக உலகை வாட்டி வதைத்து வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது. ஓமிக்ரானின் புதிய வகை வைரஸான BA.2.75 தற்போது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் BA.4 மற்றும் BA.5 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து தெரிவித்த உலக […]
இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்: இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார […]
கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதால் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது […]
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வேண்டுகோளின் படி இந்தியா சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு வழங்க உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வடகொரியாவின் மருத்துவ விநியோக பற்றாக்குறையை இந்தியா உணர்கிறது மற்றும் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் வடிவத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. வட கொரியாவிற்கு செய்யப்படும் […]
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 81,000 முதல் 138,000 பேர் வரை பாம்பு கடியால் இறப்பதாக தெரிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்தியாவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2000 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் பாம்பு கடித்த இறந்தனர். மேலும் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த இறப்புகளை தவிர்க்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. டொரொன்டோவை தளமாகக் கொண்ட ஒரு கூட்டு […]