மார்ச் 15, ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும். நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா; நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா; நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. தரம் குறைந்த சாமான்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது குற்றம். நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றே கடமைகளும் இருக்கின்றன. […]