இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பிரதமர் மோடி இரண்டு நாள்களுக்கு முன் மக்களிடையே உரையாற்றும்போது 4- ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் இந்த ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார். இந்தியாவில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் […]