கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர் குடிப்பதைக் காணக்கூடிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் நாயை போல், ஊர்ந்து செல்லவும், எச்சில் துப்பவும், நாய்களைப் போல குரைக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஹிந்துஸ்தான் பவர் லிங்க் என்கிற தனியார் நிறுவனத்தில் பணியாளர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. ஆபீஸின் டார்கெட்டை முடிக்கவில்லை என்பதற்காக, நாயை போன்று […]