நீலகிரி : கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்….!

நீலகிரியில் கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கூடுதல் போனஸ் வேண்டும் என கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதமே நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் விரைவில் தங்களுக்கான தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமெனவும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் … Read more

திருப்பூர் வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி…!

திருப்பூருக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வந்த பின்பே வெளிமாநில தொழிலாளர்கள் … Read more

கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

சாத்தூர் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து – 7 தொழிலாளிகள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் … Read more

UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை – அரசாங்கத்தின் அழைப்பு!

UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை என அரசாங்கத்தால் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  பான், ஆதார், டிஜிலோகர், எரிவாயு முன்பதிவு, மொபைல் பில் செலுத்துதல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல வகை பயன்பாடுகளை கொண்ட UMANG செயலி பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்க சேவைகளை மொபைலிலேயே வழங்க கூடிய இந்த செயலுக்கு குரல் கொடுக்க ஆள் தேவைப்படுகிறது. எனவே இது குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவமும் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

புதிதாக துவங்கும் தொழில்களில் பெரும்பகுதியினை உள்ளூர் வாசிகளுக்கே கொடுக்க தெலுங்கானா முடிவு!

புதிதாக துவங்கும் வேலைகளில் பெரும்பகுதியை தெலுங்கானா வாசிகளுக்கு கொடுக்க அரசு முடிவு. தெலுங்கானாவில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பலரும் வேலை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. எனவே தற்போது புதிதாக பல தொழில்கள் துவங்க இருப்பதால், 80 சதவீத அரைகுறை வேலைகளையும் 60 சதவீத திறமையான வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்க தெலுங்கானா அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி ராமராவ் மற்றும் முதலமைச்சர் … Read more

SBI அலுவலக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் – 42,000 வரை சம்பளம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரி பணியிடங்களுக்கு 3850க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை அறிவித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது தனது காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செயல் முறை, கல்வித்தகுதி, ஆன்லைன் பதிவு, செயல்முறைகள் கட்டணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்து திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. 42,000 வரை சம்பளம் அளிப்பதாகவும் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் 3850 காலி பணியிடங்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் … Read more

8 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரத்தை மாற்ற முடியாது -நாடளுமன்ற குழுவில் தகவல்

ஒரு சில மாநிலங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரத்தை  மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றக் குழு கூட்டம் பாஜக எம்.பி. பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் ,மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் கொரோனாவிற்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கம்  அளித்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் 9 மாநிலங்கள் தொழிலாளர் சட்டத்தில் 8 மணி நேரம் … Read more

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.. அரசு அறிவிப்பு!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய … Read more

சிறப்பு ரயிலை இயக்க உங்களுக்கு மனம் இல்லை , அவர்கள் தனியார் வாகனத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும்- சஞ்சை ராவத்

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பில் இந்தியாவும் தப்பவில்லை.  எனவே இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கால்நடையாக நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இதுகுறித்து ஆளும் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மராட்டிய அரசுக்கு ஒரு … Read more