விருது நகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பட்டாசு தயாரிக்க கூடிய பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் 55 […]