நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு பெரும்பாலானவர்களுக்கு அலுவலகம் சென்று பணி செய்வது என்பது, உலகில் உள்ள அலுவலகம் சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் சங்கடமான மாற்றமாக உள்ளது. நியூயார்க் டைம்ஸ் தனது ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை மேற்கொண்ட […]
பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன. “பருவமழை தொடர்ந்து நகரின் […]
பிரித்தானிய கோடீஸ்வரர் ஆலன் சுகர் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் “சோம்பேறிகள்” மற்றும் குறைவான ஊதியம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய ட்வீட் ட்விட்டரில் கணிசமான பின்னடைவை உருவாக்கியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வதால், வைட்ஹால் அலுவலகங்களை £1.5 பில்லியனுக்கு அரசாங்கம் விற்பனை செய்வதைப் பற்றி பத்திரிகையாளர் ஆண்ட்ரூ பியர்ஸ் ட்வீட் செய்தபோது “அரசு ஏன் பணியார்களை அலுவலகங்கலுக்கு திரும்ப உத்தரவிடவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். “சோம்பேறிகள் வேலை செய்யும்போது வீட்டில் கோல்ஃப் மற்றும் டென்னிஸ் […]
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய விதி 43A யை (சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006) வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. புதிய விதியானது, SEZ இல் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது.வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில்,ஒப்பந்த ஊழியர்கள் […]
டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெமோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைதூர வேலையைச் செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் (அதாவது *குறைந்தபட்சம்*) 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவிலிருந்து வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நாம் கேட்பதை விட குறைவு. மேலும் ,”இது சாத்தியமற்றது குறிப்பாக விதிவிலக்கான பங்களிப்பாளர்கள் […]
கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால்,கூகுள் நிறுவனம் ரூ.7400 கோடியை சேமித்துள்ளதாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்றானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளன.இருப்பினும்,இதற்குப் பின்னால் லாபகரமான திட்டங்கள் உள்ளன. ஏனெனில்,ஒரு இடத்தில் நிறுவனம் அமைத்து அந்த இடத்திற்கு வாடகை கொடுக்க தேவையில்லை. மேலும்,மின்சாரக் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.எனவே,ஊழியர்கள் […]
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடங்கி உள்ளது.பொருளாதார ரீதியாக கடும் சரிவை பல நாடுகள் சந்தித்து வருகிறது.கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல முன்னணி தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகிறது.அண்மையில் கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. அதேபோல் ட்விட்டர் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் விரும்பினால் காலம் முழுவதும் வீட்டிலிருந்தே வேலைகளைத் தொடர அனுமதி அளித்தது. […]
திருமணத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருக்க மணமகள் லேப்டாப்பில் வேலை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உட்கார்ந்து வேலைப்பார்த்து வருகின்றனர். இது பலரின் தனிப்பட்ட வாழக்கையில் சிக்கலை ஏற்படுத்தவும் செய்கிறது. மேலும் ஊரடங்கில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். கலந்து கொள்ள முடியாதவர்கள் Zoom ஆப் மூலம் திருமணத்தை கண்டு […]
வொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப் பரிச்சயமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக ஐடி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது லாக்டோன் சூழலில் அனைவரையும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பான்மையான துறைகள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை பயன்படுத்தினார்கள். TCS போன்ற முக்கியமான ஐடி நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் தங்கள் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களை வொர்க் ஃப்ரம் […]
ஏர்டெல் நிறுவனம் தற்போது 251 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா சலுகைகளை எந்தவித காலவரையறை வரம்புகள் இன்றி வழங்கி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பல்வேறு தொலைத்தொடர்பு நெட் வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அதன்படி, ஏர்டெல் நிறுவனமும் தற்போது சிறப்பு […]