சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோ உட்பட 250 ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி, பெண்களுக்காக 100 பிங்க் ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நீல நிற ஆட்டோக்கள், உடன் […]
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி, மோட்டர் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களே இயக்கும் இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மற்றும் VItd device எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் சென்னையில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இத்திட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது. சென்னை நகர எல்லைக்குள் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து […]
இந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியை கட்டாயமாக்குவது குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்களும்,சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,இந்தி தெரிந்துக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்து வித்தியாசமான கருத்து ஒன்றை பாஜக நிர்வாகி அதிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் பெண்கள் இரவில் பயணிக்கும் போது,யாராவது வந்து தொல்லை செய்தால் இந்தி […]
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம். பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை நடத்துநரே கீழே இறக்கிவிடலாம் அல்லது காவல்துறையில் ஒப்படைக்கலாம் என மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பெண் பயணிகளிடம் ஆபாச செயலை செய்தாலோ, விசில் அடிப்பது, கண் சிமிட்டுவது உள்ளிட்ட தவறான செய்கைகளை குற்றமாக கருதப்படும் என்று […]