இந்தியருக்கு உதவியால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் நிருபர், 2 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் ஹமீத் அன்சாரி. இவருக்கு இன்டர்நெட் மூலம் பாகிஸ்தான் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஹமீத் அன்சாரி கடந்த 2012ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அவர் உளவு பார்க்க வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் பெண் நிருபர் ஜீனத் ஷாஷாதி அவருக்கு செய்ய நினைத்தார் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப மற்றும் சவுதி மன்னர் சல்மான் ஆகியோர் ஒப்புக் கொண்டதன் பேரில், அடுத்த ஆண்டில் சவுதி மன்னர் சல்மான் வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த தகவலை இருநாட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.இவ்வாறு […]
இந்தியாவுக்கு 22 அதிநவீன “சீ கார்டியன்’ ரக ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது, இருநாட்டு பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அந்த விமானத்தைத் தயாரிக்கும் நிறுவன அதிகாரி விவேக் லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சீ கார்டியன் விமானங்களைத் தயாரிக்கும் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச திட்டநுட்ப மேம்பாட்டுப் பிரிவுக்கான செயல் தலைவரான அவர், சர்வதேச விவகாரங்களுக்கான அட்லாண்டிக் கவுன்சில் அமைப்பிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:200 கோடி டாலர் (சுமார் ரூ.12,800 கோடி) மதிப்பில், […]
உலகின் மிக வயதான அதாவது சமீபத்தில் 114வது பிறந்த நாளை கொண்டாடிய இஸ்ரேல் நாட்டை சேர்ந்த முதியவர் நேற்று மரணம் அடைந்தார். போலந்து நாட்டில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் கடந்த 1903ஆம் ஆண்டு பிறந்த கிரிஸ்டல் என்பவர் யூத மதத்தை சேர்ந்தவர். இவர் தனது வாழ்நாளில் 2 உலகப் போர்களையும் பார்த்தவர் முதல் உலகப்போரில் தனது பெற்றோரை இழந்த கிரிஸ்டல், ஹிட்லரின் நாஜி படைகளால் மனைவி மற்றும் குழந்தைகளையும் இழந்தார். பின்னர் இன்னொரு பெண்ணுடன் திருமணம் […]
ஜெர்மனியில் அடுத்த வாரம் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது என்னென்ன விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்யும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.ரஷியா தவிர, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின் பொதுவான முக்கிய […]
சோங்கிங் நகரத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் சன் ஷெங்காய். இவர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்த நிலையில், அவரை கட்சியிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சென் மைனர் அந்தப் பொறுப்பை ஏற்பார் என்றும் சோங்கிங் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரம் வாய்ந்த பொலிட்பியூரோ அமைப்பின் 25 உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் சன் […]