ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று (2-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. […]