ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 100 மணி நேரம் இயங்கும் …!!! அதென்ன.. ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்…!!!!

  • இசை என்றால் மயங்காதவர்கள் யாரும் இலர்,அதிலும் தனிமையில் இசை என்பது சொல்லவா வேண்டும்.
  • அந்தவகையில்  தற்போது வயர்லெஸ் ஏர்பட் என்ற சாதனம் தற்போது அறிமுகமாகியுள்ளது.

மின்னனு சாதனங்கள் தயாரிப்பில் தற்போது முன்னனியில் இருப்பது ஹைபியூச்சர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இனைப்பு அற்ற ஏர்பட் என்ற கருவியை தற்போது தயாரித்துள்ளது. இந்த சாதனத்தின் சந்தை விலை ரூ.4,499/-. ஆகும். இந்த சாதனத்தில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சார்ஜிங் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ந்தது. இதன் உதவியால் 100 மணி நேரம் வரை இந்த சாதனம் இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்பட்டில் உள்ள பேட்ட்ரியானது,75 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. மேலும் இதில், புளூடூத் 5.0  என்ற அளவாகும்.இந்த புளூடூத் மூலம் இது 10 மீட்ட்ர் சுற்றளவிற்க்குள் இது சிறப்பாக செயல்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம்  வாட்டர்  மற்றும் டஸ்ட் புரூஃப்  ஆகும்.இத்தகய சிறப்பு நிறைந்த இந்த ஏர்பட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.