நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கடந்த 7ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கால அட்டவணைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற முதல் முழு அமர்வு இதுவாகும். ஜக்தீப் தன்கர் கூறுகையில், கிறிஸ்மஸ், பொங்கல், […]
கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். டெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில், 77,656 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் நாளான இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டம் என அறிவிப்பு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 7 முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்டறிய டிசம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்ற வாளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு […]
புதிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என்று வைகோ தெரிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையைவெளியிட்டது.இந்த புதிய கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைத்தொடர்ந்து 3 -வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு […]
நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களைவையில் தாக்கல் செய்த மசோதாவில் மூன்று முறை தலாக் எனக் கூறி முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது.