கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ. 12,000 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்குவதாகவும், அதனை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதித் தொகுப்பை கடந்த மே மாதம் அறிவித்தார். இதுகுறித்த […]