கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். கர்நாடகா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மொத்தமாக வெளியேறி அந்த காட்டு யானைகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழக பகுதியான ஓசூர், நாகமங்கலம் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முக்காட்டுள்ளன. தகவலறிந்து வந்த தமிழக வனத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.
உலகளவில் ஈர்க்கப்பட்ட சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் தற்போது அதன் சொந்த வாழிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வந்த 15 யானைகள் கடந்த ஜூன் மாதத்தில் அதன் வாழ்விடத்திலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கூட்டம் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நடமாட தொடங்கியது. யானைக்கூட்டங்கள் ஒன்றாக சுற்றி திரிந்து பல விளைநிலங்களை சேதப்படுத்தவும் செய்தது. மக்கள் வாழ்விடங்களில் புகுந்து பல சேட்டைகளும் செய்தது. […]
சீனாவில் நகர்ப்பகுதிக்குள் நுழைந்த 15 யானைகள் காட்டுப்பகுதியில் ஒன்றாக ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஹூனிங் நகருக்குள் திடீரென்று 15 காட்டுயானைகள் நுழைந்து அங்கு மக்கள் இருக்கும் பகுதிக்குள் சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டுயானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பாதை மாறி 480 கி.மீ நடந்து வந்துள்ளது. இதனால் தற்போது ஹூனிக் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]